வேலூர்=13
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி
பல்கலைக்கழகத்தில் 40 ஆம் ஆண்டு மாணிக்க விழாவையொட்டி,
முன்னாள் குடியரசு துணைத் தலைவர்
வெங்கையா நாயுடு
பங்கேற்று
கல்லூரி மாணவிகளின்
தங்கும் விடுதியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில
நீர் வளத் துறை
அமைச்சர்
துரைமுருகன்,
விஐடி வேந்தர் ஜி விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய
வெங்கையா நாயுடு,
கல்வியின் துணைகொண்டு
நம் நாட்டை வலுப்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும்.
விண்வெளி துறையில்
பெரும் பல முன்னேற்றங்கள்
ஏற்பட்டுள்ளன.
அதன் காரணமாக
அனைத்து துறைகளிலும்,
மற்றும் நெடுஞ்சாலைகள்
கிராமப்புறங்கள் தொலைக்காட்சி செயல்பாடு, தொலைக்காட்சி இணைப்பு,
உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைக்கப்பட்டு
விண்வெளியில் பல சாதனைகளை புரிந்து வருகிறோம்
ஆனால் இன்னும் 18% மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் படிப்பறிவு இல்லாமல் வாழ்கின்றனர்.
இதை மனதில் வைத்து, நாம் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள
அவற்றினை ஒழிக்க பாடுபட வேண்டும்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற இடைவெளியைக் குறைக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
நகர்ப்புறத்தில், எல்லாம் கிடைக்கும்.
கிராமப்புறங்களில், இந்த விஷயங்கள் சில கிடைக்கவில்லை.
எனவே கிராமப்புற மக்களின் அந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும்.
அவர்களுக்கு தேவையான சேவைகளை வழங்க வேண்டும்.
மக்களுக்கு இலவசங்களை வழங்குவதை விட அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
மக்களுக்கு தேவைப்படுவது இலவசங்கள் அல்ல.
இலவச கல்வி தேவை.
ஏழை மக்களுக்கு இலவச சுகாதாரம் தேவை.
ஏழை மக்களுக்கு புதிய சுகாதாரம் மற்றும் கல்வி
இருந்தால்
அனைத்து பொருட்களையும் தாங்களே பெறுவார்கள்.
கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில் விவசாயம் நமது அடிப்படை கலாச்சாரம்.
இன்றும் 56% மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர்.
நாம் அரசாங்கத்தை மட்டும் நம்பி இருக்கக் கூடாது.
அனைத்தையும் அரசே செய்துவிடும் என்ற தவறான எண்ணம் நம் மக்களிடையே உள்ளது.
அனைத்தையும் அரசால் மட்டும் செய்ய முடியாது.
தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்
பொதுத்துறை மற்றும் தனியார் துறை இரண்டும்
இணைந்து கல்வி சுகாதாரம் வேளாண்மை ஆகியவற்றில் முக்கியத்துவம் அளித்து
கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை.
ஏனெனில் புயல், வெள்ளம், வறட்சி, அவை விவசாயிகளை மிகவும் பாதிக்கின்றன.அதனால்தான் விவசாயத்திற்கும் அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்
என்று வெங்கைய நாயுடு கூறினார்.