வேலூர்_27
வேலூர் மாவட்டம் ,வல்லம் மதுரா, சந்தனகொட்டா கிராமம் அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் உடனமர் தஞ்சியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகம் விழா நடைபெற்றதை தொடர்ந்து 48ஆம் நாள் மண்டல பூஜை விழாவில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். உடன் வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் ,ஏழுமலை ,வெங்கடேசன், காத்தவராயன், அஜித்குமார், மற்றும் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.