மானாமதுரை:டிச:12
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் கழக திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அவைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேர்மன் மாரியப்பன் கென்னடி நகர்க்கழக துணைச் செயலாளர் வைஸ் சேர்மன் பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பேசிய நகர்க்கழக செயலாளர் பொன்னுசாமி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகத்தலைவர் தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட பாடுபடுவோம் எனவும் மீண்டும் கழக ஆட்சி தான் அமைந்திடும் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மீனவரணி பாஸ்கரன் இளைஞரணி அதியமான் பொன்னுசாமி வழக்கறிஞர் நாகராஜன் சிவாஜி கண்ணன் கவுன்சிலர்கள் மூர்த்தி பாலாஜி ஐடி விங் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.