திருச்செந்தூர்
ஆக.09- தமிழக அரசு, அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை முழுமையாக செயல்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் பள்ளிகளில் பெற்றோர்களின் பங்கை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் தொங்கப்பட்ட இக்குழு தன்னுடைய பதவிக்காலத்தை கடந்த ஜூலையோடு நிறைவு செய்தது.
இதனைத் தொடர்ந்து
புதிய குழுவை தேர்ந்தெடுக்கும் பொருட்டு பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.கே.கமாலுதீன்
மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவப் பெற்றோர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.