அரியலூர், ஆக:11
அரியலூர் மாவட்ட நகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி கிழக்கு, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும் மறுகட்டமைப்பு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இப்பள்ளி தலைமையாசிரியர் அம்சவள்ளி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தழகு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில் பள்ளியின் வளர்ச்சி பணிகள் குறித்து பெற்றோர்களுடன் கலந்து ஆலோசிக்கபட்டது. பின்னர் 2024−2026 ஆம் ஆண்டிற்கான புதிய பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர். இதில் தலைவராக ரம்யா என்பவரும், துணை தலைவராக ரவிக்குமார் உள்ளிட்ட 24 பொருப்பாளர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர். இதில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், வட்டார கல்வி அலுவலர் திவ்யஜனனி, 14 வது வார்டு உறுப்பினர் ஜெயந்தி, 15 வது வார்டு உறுப்பினர் ராணி, பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்