எத்தியோப்பியா, ஐக்கிய அரபு நாடு, சிக்கிம், ஓமன், மலேசியா வல்லுநர்கள் பங்கேற்பு !
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில், “நிர்வாகம் மற்றும் வணிக நடைமுறைகள்- 2024” என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
டீன், முனைவர் பி. கணேசன், மாநாட்டின் நிகழ்வுகள் மற்றும் உள், பன்னாட்டு 36 வல்லுனர்களையும் அறிமுகப்படுத்தினார். யுஏஇ, ஸ்கைலைன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் மகேஷ் ராமகிருஷ்ணன் பிள்ளை, சிக்கிம் பல்கலைக்கழக, முனைவர் வி. முத்து பாண்டியன், ஓமன் சுல்தான்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழக முனைவர் முகமது நவீத், யு.ஏ.இ. ஜெயின் நெலிகர், ஸ்டிர்லிங் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட், முனைவர் சன்மான், மலேசியா, யுஐடிஎம், பேராசிரியர் முனைவர் ரசானா ஜுஹைதா ஜோஹாரா, மற்றும் புனே, கல்கத்தா, புது டெல்லி, கேரளா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகிய நிபுணர்களை அறிமுகப்படுத்தினார்.
துறைத்தலைவர் முனைவர் எஸ்.கார்த்திக் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக, எத்தியோப்பியா அரசு புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மாண்புமிகு அமைச்சர் முனைவர் பெயிஸா படாடா படாசா மாநாட்டை துவக்கி வைத்து, புதிய யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை பரிமாறிக்கொள்வதில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து உரையாற்றினார். கலசலிங்கம் பல்கலைக்கழகம் புதிய தொழில் நுட்பம் மற்றும் நடைமுறைப்படுத்தலில் பரந்த மனப்பான்மையுடன் இருப்பதை அமைச்சர் பாராட்டினார். அதனால், கலசலிங்கம் பல்கலையில் தான் மேலாண்மையில் ஆராய்ச்சி முனைவர் பட்டப்படிப்பிற்கு சேர்ந்து பயின்று வருவதை பெருமையுடன் பேசினார்.
ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு மலரையும் சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.
சென்னை, காப்பீடு குறைதீர்ப்பாளர், முனைவர் கே. பிரபாகரன், வங்கி பாதுகாப்பு, நிதி விநியோகம் மற்றும் அனைத்து செயற்கை நுண்ணறிவுடன் அதன் தொழில்நுட்பக் கல்வி குறித்து பேசினார்.
சிஎம்ஏ. எ.செல்வம், ஏ.எம்., ஐ.சி.எம்.ஏ., மதுரை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான 5.0 தொழில் புரட்சி என்ற தலைப்பில் உரையாற்றினார்.
முனைவர் ஜி.ரமேஷ் பாண்டி நன்றி கூறினார்.
பேராசிரியர்கள் எஸ்.ராணி, ஜி.ரமேஷ் பாண்டி, ஜி.தாமரைசெல்வி மற்றும் அனைத்து பணியாளர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.