பூதப்பாண்டி – நவம்பர் – 25-
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள ஞான தாசபுரம் பகுதியில் சதீஷ் கிருஷ்ணா என்பவர் உரிய அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தி வந்தார் அதற்கு தேவையான மூலதனமான மண்ணை அரசு புறம்போக்கு நிலத்தில் எடுத்து பயன்படுத்தி வந்தார். அப்பொழுது அந்த மண் எடுக்கும் இடத்தில் இருக்கும் சிறிய பாறைகளை வெடி வைத்து தகர்த்து வந்ததாக தோவாளை தாசில்தார் கோலப்பனுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அவரும் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடம் வந்து விசாரித்தனர் விசாரணையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் திருட்டுதனமாக மண் எடுத்ததும், பாறைகளை உடைத்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அந்த இடத்தில் செங்கல் சூளை நடத்தி வந்த சதீஷ் கிருஷ்ணா மற்றும் அவருக்கு உரு துணையாக இருந்து இந்த சிறிய பாறைகளை உடைக்க அரியாம்கோடு பகுதியை அடுத்த மங்களம் பகுதியை சேர்ந்த சுபின் ஜெயராஜ் (40) என்பவர் டிராக்டருடன் கூடிய கம்பிரசர் இயந்திரத்தை கொண்டு உடைத்தது தெரிய வந்தது இதன் அடிப்படையில் போலீசார் சதீஷ் கிருஷ்ணா மற்றும் சுபின் ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர் இதில் சதீஷ் கிருஷ்ணாவை கைது செய்தனர் சுபின் ஜெயராஜ் வாகனத்துடன் தலைமறைவாகி உள்ளார் கடந்த ஏழு மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் நேற்று காலையில் பார்வதிபுரம் பாலம் அருகே நிற்பதாக பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ்க்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரை கைது செய்தனர் அவரிடம் நடந்த விசாரணையில் அவர் சமூக ரங்கபுரம் பகுதியில் பாறை உடைக்க பயன்படுத்திய இயந்திரத்தை மறைத்து வைத்ததை ஓப்பு கொண்டார்.பின்னர் போலீசார் சம்பவ இடம் சென்று அந்த இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.