ஜூலை: 31
பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டத்துகாளியம்மன் கோயில் அருகே ஒரு இடத்தில், ஒரு நபர் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து உடனடியாக அங்கு சென்ற பெருமாநல்லூர் காவல் ஆய்வாளர் வசந்தகுமார், தலைமை காவலர் விஜய் ஆனந்த்& காவலர்கள் அங்கு சந்தேகப்படும்படி இருந்த நரேஷ்சேத்தி(27), த/பெ. உமேஷ்சேத்தி, பவுன்சோனி ஒடிசா என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் சுமார் 3 கிலோ எடையுள்ள கஞ்சாவவை விற்பதற்காக வைத்திருந்ததால்அவரை கைது செய்து, வழக்கு பதிந்து,பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.