மார்த்தாண்டம், நவ- 18
குழித்துறை அருகே நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரயில் பாதையில் குருமத்தூர் என்னும் இடத்தில் ரயில்வே கேட்டுள்ளது. கடந்த வாரம் திருத்துவபுரத்தை சேர்ந்த பிளட்சன் (36) என்பவர் கேட் கீப்பராக பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மூன்று பேர் பிளட்சனை சரமாரியாக தாக்கி, பொருட்களை உடைத்து, ரயில்வே பாதையில் இருந்த சிக்னலையும் உடைத்து விட்டு அங்கிருந்த தப்பி சென்றனர்.
இது தொடர்பாக ரயில்வே போலீஸ், களியக்காவிளை போலீசர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ரயில்வே இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் போலீசார் விசாரித்து படுகாயமடைந்த பிளட்சனை குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, சம்பவத்தில் ஈடுபட்டது காப்புக்காடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின், ராஜு, முஞ்சிறை பகுதியை சேர்ந்த சம்ஜோத் (25) ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்களை பிடிக்க இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சம்ஜோத்தை நேற்று போலீசார் கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.