நாகர்கோவில் நவ: 24,
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம்
அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர் ரமணி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை கண்டித்தும்…
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் குடும்பத்தில் ஒருவருக்கு
அரசு வேலை வழங்க வேண்டியும்
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டியும்
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு சார்பில் நாகர்கோவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் டோமினிக்ராஜ்
தலைமை தாங்கினார்.
ஆசிரியர் ரமணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு முதுநிலை பட்டாதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவரும் கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பென்னட் ஜோஸ்
தொடக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாவட்டச் செயலாளர்
சுமகாசன்,
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் கழகத்தின்
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்
தோழர் எட்வின் பிரகாஷ்,
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினர் சிவஸ்ரீ ரமேஷ் ,
தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் நாகராஜன்
ஆகியோர் ஆர்ப்பாட்டக் கண்டன உரையாற்றினர்.
தமிழ்நாடு
உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வேலவன் ஆர்ப்பாட்டம் நிறைவுரையாற்றினார்.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்புச் சங்கங்களை சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சிபு நன்றி கூறினார்.
ஆசிரியர் படுகொலையை கண்டித்தும் பணி பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.