நாகர்கோயில் – நவ- 30,
நாகர்கோவில் மாநகராட்சியில் இயல்பு மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் தலைமையில் நடைபெற்றது . ஆணையாளர் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . அதாவது 19. 10 . 2024 , ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நாள் தினம் அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 19 ஆம் தேதி மாநகராட்சி சார்பாக பாராளுமன்ற மேலவை உறுப்பினர் டாக்டர் . கனிமொழி , சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் மற்றும் புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள் டாக்டர். சிவராம் , டாக்டர் சுதாகர் மற்றும் பல மருத்துவர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியினை நாகர்கோவில் மாநகராட்சியில் ஆணையாளர் உட்பட அத்தனை அதிகாரிகளும் இருந்து மாநகராட்சியில் பணிபுரிகின்ற சகோதரிகள் 934 பேர் கலந்து கொண்டார்கள். அன்றைய தினமே 97 சகோதரிகளுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா ? என்று கண்டறியப்பட்டது 97 பேரில் நாலு பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டு அதிர்ச்சியாகி விட்டோம் அப்பொழுதே அந்த கூட்டத்திலே கூறினேன் ஆனையர்களுடைய அனுமதியோடு இந்த கூட்டத்தில் இருக்கின்ற 934 சகோதரிகளுக்கு குறிப்பாக தூய்மை பணியாளர்கள் 753 பேர், 318 பேர் அதன் பிறகு அனிமேட்டர்ஸ் என இதெல்லாம் பார்க்கும்போது மொத்தம் 934 சகோதரிகள் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினோம் . அந்தக் கூட்டத்திலேயே ஒரு ” மார்பக புற்று நோய்க்கு ” அறுவை சிகிச்சை செய்த ஒரு சகோதரி தான் பட்ட கஷ்டங்களையும் அதில் எதுவுமே இல்லை யாரும் பயப்படத் தேவையில்லை என்பதை தைரியமாக விழிப்புணர்வு செய்தார்கள். அத்தனை ஏற்பாடுகளையும் எங்களுடைய ஒரு நகர்ப்புற மருத்துவர் ஆயிஷா என்பவர் செய்து கொண்டிருந்தார் 934 பேர் நம்முடைய மாநகராட்சியில் பணிபுரிகின்ற சகோதரிகளுக்கு நீங்கள் ஸ்கிரீனில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னோம் அதன் அடிப்படையில் பரிசோதனை செய்தார்கள். ஒரு அதிர்ச்சியான ஒரு சம்பவம் 934 பேரில் 42 சகோதரிகளுக்கு மார்பக கட்டி இருப்பது கண்டறியப்பட்டு மிகவும் வருத்தப்பட்டோம் . அதே சகோதரிகளை அழைத்தோம் நானும் மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஒன்றாக இருந்தோம் அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தோம் உங்களை பாதுகாப்பதற்கு இந்த மாநகராட்சி இருக்கிறது என்று சொன்னோம் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தோம் மருத்துவ வசதிகளை செய்து கொடுத்த பிறகு நாங்கள் நினைத்தோம் இவர்கள் இங்கிருந்து புற்றுநோய் கண்டறியப்பட்டு புற்று நோய்க்காக வேண்டி சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிக கூட்டங்கள் இருக்கும் ஏன் புற்றுநோயை கண்டுபிடிக்க கூடிய மேமோகிராம் மிஷின் நாம் வாங்க கூடாது என்று நினைத்தோம் அதனுடைய மதிப்பு என்ன என்று கேட்டோம் 20 லட்சம் ரூபாய் ஆகும் என்று சொன்னார்கள் இன்று மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து அதனை வாங்குவதற்கு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். இதே சம்பவத்தை இதே நிகழ்வை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்திருக்கின்றோம் , சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு தெரிவிஇருக்கிறோம் அதை கணக்கு பார்த்தால் இந்த நாகர்கோயில் மாநகராட்சியில் மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் மகளீர் இருக்கிறார்கள். மாவட்டத்தில் ஒன்பது லட்சத்தி 444,000 மகளிர் இருக்கிறார்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் கொடுத்திருக்கிறேன். இந்த மாவட்டத்திற்கு கண்டிப்பாக ஒரு கேன்சர் சென்டர் வரவேண்டும் என்று கடிதம் கொடுத்திருக்கிறேன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு கடிதம் கொடுத்திருக்கிறேன் வரும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள் கண்டிப்பாக வரும் இன்று இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதின் அத்தனை மாமன்ற உறுப்பினர்களும் சந்தோஷத்தை தெரிவித்து இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கிறார் எனக்கு அறிவுக்கு எட்டிய வகையில் மாநகராட்சியில் உள்ள அத்தனை சகோதரிகளுக்கும் பரிசோதனை செய்தது நாங்கள் தான் முதலில் இருப்போம் என்று நம்புகிறேன்.