நாகர்கோவில் நவ 14
அஞ்சல் துறையின் வளமான பாரம்பரியத்தை எடுத்துரைக்கவும், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியினை ஊக்குவிக்கவும் இந்திய அஞ்சல் துறை சார்பாக நடைபெற்ற மகளிர் இருசக்கர பேரணியானது பெங்களூருவில் தொடங்கி கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தபால் வட்டங்கள் வழியாக புதுச்சேரி, இராமேஸ்வரம், கன்னியாகுமரி, மூணாறு, மைசூரு வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.. இதில் தபால் துறை இயக்குனர் மற்றும் 13 இருசக்கர வாகன ஓட்டிகள் குழுவாக பங்கேற்றனர்.
இப்பேரணி 13.11.2024 அன்று (பிற்பகல்) கன்னியாகுமரிக்கு வந்தடைந்தது. கன்னியாகுமரி கடற்கரை சாலையில் பாரம்பரிய செண்ட மேளத்துடன் இவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மாணவர்களின் டாய் ஆகர் கடிதம் எழுதும் போட்டி மற்றும் மைதான அளவிலான கலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மூத்த குடிமக்கள், அஞ்சல் துறை வாடிக்கையாளர்களை சந்தித்து பின்னர் தபால் துறை ஊழியர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்றனர். அதன் பின்னர் இந்த பேரணி கன்னியாகுமரியில் இருந்து 14.11.2024 இன்று (காலை) மூணாறு நோக்கி புறப்படுகிறது .