நாகர்கோவில் டிச 19
மகாத்மா காந்தி ஊராக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் குறித்த நேரத்தில் ஊதியம் கிடைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும். இதை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றிற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
நாட்டில் பெருகி வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தினமும் தொழிலாளர்களுக்கு ரூபாய் 5௦௦ வழங்க வேண்டும். ஏழை தொழிலாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காமல் மிகவும் தாமதமாக இந்த ஊதியம் வழங்கப்படுகிறது.
அரசு இவற்றை கருத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார்.