அல்லிநகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்று வரும் அருள்மிகு ஶ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா விடிய விடிய பக்தர்கள் கண்விழித்து தரிசனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்று வரும் அருள்மிகு ஶ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில்
மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு மூலவருக்கு பதினாறு வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டு
பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு நான்கு கால பூஜைகளும் அதனைத் தொடர்ந்து
ஆதிமூல லிங்கத்திற்கும் குருபகவான் தஷ்சணாமூர்த்திக்கும் ஆலயத்தில் உள்ள உப தெய்வங்களுக்கும் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. ஐய்யனின் அருள் ஆசி பெற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏறாளமான பக்தர்கள் வருகை புரிந்து இரவு முழுவதும் கண்விழித்து அய்யனை சிறப்பு வழிபாடு செய்தனர்.
தரிசனம் காண வந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இரவு முழுவதும் சிற்றுண்டி உணவுகள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்திருந்தனர்.
பாதுகாப்பு பணியில் திருப்புவனம் போலீசார் ஈடுபட்டனர்.