களியக்காவிளை பிப்,27 –
தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருநட்டாலம் மஹாதேவர் கோயில் வளாகத்தில் பாத சேவை , சத்சங்க ம் பஜனை, சிவசகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது.
தர்ம ரக்ஷ்ண சமிதியானது தயானந்த சரஸ்வதி சுவாமிகளால் துவங்கப்பட்டு ஓம்காரநந்த சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி நடந்து வருகிறது. இந்த ஸமிதி சார்பில் தமிழகம் முழுதும் சிவராத்திரியை முன்னிட்டு சத்சங்கம், பஜனை, சிவ சகஸ்ர நாம அர்ச்சனை உள்ளிட்ட ஆத்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு முஞ்சிறை மகாதேவர் கோயில், அம்சி மஹாதேவர் கோயில். சென்னி நின்ற மகாதேவர் கோயில் உள்ளிட்ட 12 சிவன் கோயில்களில் சிவ சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து திருநட்டாலம் மஹாதேவர் கோயில் வளாகத்தில் காலை பாத பூஜை நடந்தது. இதில் நவகுமாரி விஜயகுமார் திருவிளக்கு ஏற்றி வைத்தார்., இரவீந்திரநாத குறுப்பு, ராமச்சந்திரன் நாயர்,சித்த வைத்தியர் ராஜு உள்ளிட்டோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினர். சங்கர நாராயண சேவா அறக்கட்டளை தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார்., விஜயராகவன்,, ஹரிதாஸ், செல்வசிவலிங்கம், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சத்சங்கம், பஜனை மாலை சிவசகஸ்ர நாம அர்ச்சனை உள்ளிட்ட நிஷ்ச்சிகள் நடந்தது.தொடர்ந்து நடந்த சத்சங்கம், மற்றும் சமய மாநாட்டில் தர்ம ரக்ஷ்ண ஸமிதி மாவட்ட தலைவர் பத்மகுமார் தலைமை வகித்தார். நட்டாலம் சமய வகுப்பு மாணவிகள் இறைவணக்கம் பாடினர். சங்கர நாராயண சேவா அறக்கட்டளை செயலாளர் றசல்ராஜ், வரவேற்றார். தர்ம ரக்ஷ்ண ஸமிதி குமரி மண்டல பொதுச் செயலாளர் பாலசேகர், ஆசிரியர் இரமேஷ், உள்ளிட்டோர் பேசினர்.
தர்மரக்ஷ்ண ஸமிதி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகதிஷ் குமார், அமைப்பாளர் பால்ராஜ், செயலாளர்கள் சுதர்சன ராஜ், ரவீந்திரன், ஜெயக்குமார்,அசோகன். ஒன்றிய பொறுப்பாளர்கள், நிகழ்ச்சியை ஒருங்கினைத்து செய்திருந்தனர் . இராஜேஸ்குமார் நன்றி கூறினார்.