ஈரோடு செப். 17
ஈரோடு நசியனூர் அருகே உள்ள எம் ஓலப்பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கிராம சாந்தியுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி விக்னேஸ்வர பூஜை .தன பூஜை நவக்கிரகம் மற்றும் கணபதி ஹோமம் போன்ற
நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன .நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது .இந்த விழாவை சென்னிமலை சுப்பிரமணியசாமி கோயில் உமாபதி குருக்கள் நடத்தி வைத்தார் . விழாவை ஒட்டி டாக்டர் ரமேஷ் சின்னச்சாமி நாதஸ்வர இசை குழுவினரின் மங்கள இசை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் பெரியசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.