கோவிலம்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா.
சென்னை அடுத்த கோவிலம்பாக்கம் சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் திறப்பு விழா மற்றும் மஹா கும்பாபிஷேக பெருவிழா கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கீதா மணிமாறன் தலைமையில் நடைப்பெற்றது.
முன்னதாக கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைப்பெற்று வினாயகர் பூஜை கணபதி ஹோமம் மஹா சங்கல்பம் தீபாராதனை அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் கோபுர கலசம் நவ கலச பூஜை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
இந்த கோவில் கும்பாபிஷேக பெருவிழாவில் ஏறாளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து கோபுர கலச கும்பாபிஷேகம் நடைப்பெற்று புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
வருகை புரிந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.