வேலூர் 14
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா ,பொய்கை மோட்டூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில் விக்னேஸ்வர பூஜை ,மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ,நவகிரக ஹோமம், மங்கள இசை வாத்தியங்கள் முழங்க விமான கலச கோபுரத்திற்கு கும்பாபிஷேகமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.