திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல் பென்னாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவன் பார்வதி அண்ணாமலையார் திருக்கோவிலில் கோவில் நிர்வாகி சிலாகாசி கரிங்கண்ணன் முனுசாமி தலைமையில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதற்கு முன்னதாக முதலாம் கால பூஜை இரண்டாம் கால பூஜை கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிவன் பார்வதி அண்ணாமலையாருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் ஊர் பொதுமக்கள் கோவில் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மற்றும் தீர்த்த கலச பிரசாதம் மற்றும் தரிசனம் காண வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.