மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில் வடக்கு வீதியில் அப்பகுதி மக்களின் இஷ்ட தெய்வமான சுயம்பு செல்வவிநாயகர் மற்றும் கனக துர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழா கடந்த வெள்ளிக்கிழமை பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. கும்பாபிஷேக தினமான இன்று காலை யாகசாலையில் மகாபூர்ணாஹூதி செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்ட பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டது. அவற்றை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்து விமான கலசத்தில் புனிதநீர் வார்த்து மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இதில் நிர்வாகி கண்ணன், நிர்வாக தலைவர் மற்றும் பொருளாளர் லட்சுமணன் நிர்வாக செயலாளரும் நகரம் என்ற உறுப்பினருமான ராமச்சந்திரன், நிர்வாக உறுப்பினர்கள் ராமசாமி, தேயேந்திரன், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துர்க்கை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics