திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் அமைந்துள்ள மங்கள ஈஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
திருவள்ளூர் மாவட்டம்
மணவாள நகரில் அமைந்துள்ள சிவனடியார் நால்வர் உழவார பணி மன்றம் என்ற அமைப்பு 1990 இல் நிறுவப்பட்டு அன்று முதல் பழமையான கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிவ தலங்களுக்கு சென்று உழவார திருப்பணியை செய்ததின் பலனாகவும் தெய்வத்திருவாளர்கள் சுப்பிரமணிய ரெட்டியார் மற்றும் அரங்கநாதர ரெட்டியார் ஆகியோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இருந்த நிலத்தையும் நீரையும் கிணற்றுடன் அளித்ததில் ஆலயம் 1992 ஆண்டு அமைக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து 1997 மற்றும் 2010 இல் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த ஆலயத்தில் ஞாயிறு தோறும் சரபேஸ்வரர் சனிக்கிழமை தோறும் அனுமன் பூஜை உள்ளிட்ட பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கோவிலில் மூன்றாவது முறையாக சன்னதிகள் புனரமைக்கப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்டு. கடந்த 3 ஆம் தேதி யாகசாலைகள் பூஜையில் விக்னேஸ்வர பிரார்த்தனை, எஜமான் பிரதிஷ்டை சங்கல்பம் கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நாளான ஆறாம் காலயாக பூஜை ஹோமம் புறப்பாடு மங்கள வாத்தியங்கள் முழங்க புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி, விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி ஸ்ரீ மங்கல ஈஸ்வரர், மங்கல ஈஸ்வரி அம்பாளுக்கு மற்ற ஸ்ரீ பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.