அரியலூர்,ஆக:12
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த அண்ணகாரன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(45). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 9-ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அப்பகுதியில் தேடிய போது, அக்கிராமம் வழியே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளிடம் ஆற்றங்கரையில் அவர் உடுத்தியிருந்த உடைகள், செருப்பு உள்ளிட்டவை கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் போலீஸார் மற்றும் ஜெயங்கொண்டம் தீயனைப்புத்துறையினர், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அணைக்கரை பகுதியில் செல்வராஜ் உடல் நேற்று மிதந்தது. இதையடுத்து தா.பழூர் போலீஸார் உடலை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்