திருச்சி, ஜுன் 04
திருச்சி மாநகரில் மதுரம் பிராண்ட்ஸ் நெக்ஸ்ட்ன் தலைமை செயலாக்க அதிகாரி B P.ரவீந்திரன். அறிமுக விழாவில் பங்கேற்று பேசுகையில் தமிழகத்தின் மையம் என்ற பெருமையுடன் நின்று விடாமல் கல்வி நகரம் தொழில் நகரம் கோவில் நகரம் என்று தனக்கென பன்முகங்களை கொண்டு விவசாயத்திற்கு வரமாய் அமைந்துள்ள காவிரி மற்றும் கல்லணையின் நகரமான திருச்சியில் தரத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் மதுரம் பிராண்ட் அரிசியை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம் மேலும் தென்னிந்திய மக்களின் அன்றாட உணவின் ஓர் அங்கம் அரிசியாகும் அந்த வகையில் தரமான அரிசி சுவையான உணவிற்கான ஆதாரம் என்பதனால் அரிசி வாங்குவதில் அனைவரும் கூடுதல் கவனம் கொடுக்கின்றோம் என்பதில் ஐயமில்லை இந்த நிலையில் மதுரம் பிராண்ட் அரிசியை மக்களுக்கு சுவை மாறாமல் நிறைந்த தரத்தோடு கொடுக்கும் பொருட்டு மதுரம் பிராண்ட் பொன்னி புழுங்கல் அரிசி ராஜபோகம் அரிசி இட்லி அரிசி மற்றும் உளுந்து வகைகளை வேகூல் நிறுவனம் தனது துணை நிறுவனமான பிராண்ட்ஸ் நெக்ஸ்ட் மூலமாக தற்போது மலைக்கோட்டை மாநகரம் திருச்சிச்யில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான மதுரம் பிராண்ட் அரிசியின் தனித்தன்மைகளானவை – கனிசமான உபரி நறுமணம் ஊட்டச்சத்து மற்றம் ஒன்றோடு ஒன்று ஒட்டாத மெல்லிய அரிசியின் தன்மை என்பதாகும் என்கின்றது. இந்த அரிசி வகைகள் அன்றாட சமையல் மற்றும் கலவை சாதம் (வெரைட்டி ரைஸ்) செய்வதற்கு உகந்ததாகும் இவைகள் அனைத்து முன்னணி சூப்பர்மார்க்கெட்டுகள், பலசரக்கு கடைகள் அரிசி மண்டிகள் ஆகியவற்றில் அரிசி 5 கிலோ, 10 கிலோ மற்றும் 26 கிலோ பேக்குகளில் இப்போது கிடை க்கின்றது. பாரம்பரியம் மாறாமல் ஆடிப்பெருக்கு விழாவை கோலகலமாக கொண்டாடி பாரம்பரிய உணவுகளை விரும்பி உண்ணக்கூடிய திருச்சிச் வாழ் மக்களுக்கு இது ஓர் மகிழ்ச்சிச்யான செய்தியாகும் என்று கூறினார்.