மதுரை டிசம்பர் 22,
மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு – உதவி ஜெயிலருக்கு அடி, உதை
மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பாலகுருசாமி பணியாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள முன்னாள் சிறைவாசியின் ஓட்டலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உணவகத்திற்கு சென்ற பாலகுருசாமி, சிறைவாசியின் மகளிடம் பேச துவங்கியுள்ளார். இது தொடர்ச்சியாக ஆரப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவியிடம் பாலகுருசாமி ஆசைவார்த்தை கூறி பேசி வருவதை
தொடர்ச்சியாக தினமும் பின் தொடர்ந்து வருகிறார் என்று பள்ளி மாணவி வீட்டில் கூறியுள்ளார். உடனே பள்ளி மாணவின் வீட்டார் மாணவியை பின்தொடர்ந்தது உள்ளனர். அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த மத்திய சிறையில் பணியாற்றி வரும்
உதவி ஜெயிலர் பாலகுருசாமி அந்த மாணவியிடம் ரூபாய் 500 கொடுத்து தனது இருசக்கர வாகனத்தில் ஏறும் படி வற்புறுத்தி உள்ளார். மறைந்து இருந்த பள்ளி மாணவி வீட்டார் உடனே
பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்த மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலர் பாலகுருசாமியை
கையும் களவுமாக பிடித்து சாலையிலே செருப்பால் அடித்தனர். அங்கு இருந்த பொதுமக்களும் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த காவலரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.