நாகர்கோவில் – ஜூன்-30
கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான பக்தர்கள் வேளாங்கண்ணி கோவிலுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். தற்போது தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், மார்த்தாண்டம், நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் அருகிலுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர்,வசதி இல்லை. இப்பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் பக்தர்களுக்கு இந்த நேரடி ரயில் சேவை இல்லாதது நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது. திருச்சி சென்று விட்டு அடுத்த ரயிலில் வேளாங்கண்ணி செல்வதற்கு இணைப்பு ரயில் வசதியும் இல்லை. இதனால் தென்மாவட்ட பக்தர்கள் சிரமப்படுகிறார்கள்.
தற்போது நாகர்கோவில் டவுன் முதல் தஞ்சாவூர் வரை இருப்புபாதைகள் இருவழி பாதை பணிகள் முடிக்கப்பட்டு ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து புனலூர் க்கு தினசரி பயணிகள் ரயில் இயங்கி வந்தது. தற்போது இந்த ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றம் செய்யப்பட்டு இயங்குவதால் போதிய வருவாய் இன்றி இயங்கிவருகின்றது. இது மட்டுமில்லாமல் இந்த ரயில் இருவழி பாதை பணிகள் முடிந்து விட்ட காரணத்தால் எந்த ஒரு கிராசிங் இல்லாமல் வெகுவிரைவாக மதுரைக்கும் மறுமார்க்கமாக நாகர்கோவிலுக்கும் சென்றுவிடுகிறது. ஆகவே இந்த ரயிலை திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்க ரயில்வே அமைச்சருக்கு கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.