மதுரை அக்டோபர் 20,
மதுரை பாலமேட்டில் எஸ். எஸ் டிரேடர்ஸ் திறப்பு விழா
மதுரை மாவட்டம் பாலமேட்டில் புதிதாக அமைந்துள்ள எஸ். எஸ் டிரேடர்ஸ் திறப்பு விழாவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தார்.
எஸ். எஸ் டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர் திமுக மதுரை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் எம். ஆர். எம். பாலசுப்பிரமணியன் மற்றும் தவப்புதல்வர்கள் எம். ஆர். எம்.பி. முரளிதரன், எம்.ஆர் எம்.பி. சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். மற்றும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ. வெங்கடேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக பகுதி செயலாளர் சசிகுமார், பாலமேடு சேர்மன் சுமதி பாண்டியராஜன், சரந்தாங்கி முத்தையன் மாநில பொது குழு உறுப்பினர், பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா, ஏ. வி. பி குழுமம் மற்றும் எஸ். டி. எம் குடும்பம் மற்றும் திமுக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள்
ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் வாடிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.