மதுரை செப்டம்பர் 29,
உலக இருதய தினத்தினை முன்னிட்டு மதுரையில் டாக்டர் மாதவன் அறிவுரை
மதுரை மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில் உள்ள பாப்பிஸ் ஹோட்டலில் உலக இருதய தினத்தை முன்னிட்டு டாக்டர்
மாதவன் செய்தியாளர் சந்திப்பில்,
30 வருடங்களுக்கு முன்னால் மக்களின் மரணங்களுக்கு முக்கிய காரணிபாக தொற்று நோய்கள் இருந்தன தற்பொழுது ஏற்படும் இள வயது அகால மரணங்களுக்கு முக்கிய காரணியாக ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் ஏற்படுகிறது. இது போன்ற அகால மரணங்களை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் 95 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்புகள் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. இவற்றுள் ஒன்றான ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட தன்னார்வு தொண்டு நிறுவனமாகிய வேர்ல்டு
பெடரேசன் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை கடந்த 2,000 ஆண்டு முதல் உலக இருதய தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடித்து வருகிறது. இருந்தாலும் இது பெரிய அளவில் மக்களை சென்றடையவில்லை. 2023 ம் ஆண்டு வேர்ல்ட் ஹார்ட் பெடரேசனால் கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்ட முப்பதுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ளும் வாய்ப்பு டாக் மாதவனுக்கு அளிக்கப்பட்டது. அக்கருத்தரங்கின் விவாத பொருளே சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் இருதய நோய்களால் ஏற்படும் அகால மரணங்களை தவிர்க்க முடியும் என்பதே இதை அவரவர் நாட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது எங்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பணி இதைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு முதல் இருதய நோய் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நம் நாட்டு மக்களிடையே தொடங்கினேன். குறிப்பாக புகை பிடித்தலை தவிர்க்கவும் சில எளிய உடற் பயிற்சிகள் மூலம் உடல் எடை பராமரித்தலோடு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த வருட உலக இருதய தினத்தை முன்னிட்டு மக்களுக்கு சொல்ல விரும்பும் சிறப்பு செய்தி வாகன ஓட்டுனர்களுக்கே,
இருசக்கர வாகன ஓட்டுனர்கள் முதல் பஸ் லாரி மற்றும் கனரக ஓட்டுநர்கள் வரை பலர் உடல் பருமனோடும் சிலர் புகைபிடிப்பவர்களாகவும், எந்த அறிகுறிகள் இல்லாமலும் வழியில்லாத நிலையிலும் ஹார்ட் அட்டாக் உண்டாகிறது. இவர்களின் இதய செயல்திறன் மிகக் குறைவாகவும் உள்ளது. இதில் சிலர் இத்தகைய உடல் நலக்குறைவோடு தங்கள் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு எந்த நேரமும் மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இதுபோன்ற நிலையில் உள்ள ஒரு தொழில் முறை ஓட்டுனர் பணியிலிருக்கும் போது அவருக்கு ஏற்படும் எதிர்பாராத ஹாட் அட்டாக் பாதிப்பால் அவரை நம்பி பயணிக்கும் பயணிகளுக்கும் பேராபத்து காத்திருக்கிறது என்றும், இதுபோன்ற உயிரிழப்பு அபாயம் உள்ள ஒரு பிரச்சனையில் ஒரு இதய நோய் நிபுணராக விழிப்புணர்வு அளிக்க வேண்டிய தார்மீக கடமை எனக்கு இருக்கிறது என கருதுகிறேன் என்று டாக்டர் மாதவன் தெரிவித்தார். இதன் மூலம் நான் சொல்ல விரும்புவது வாகன ஓட்டுனர்கள் மட்டும் இல்லாது வாகன உரிமையாளர்களும் இதை கவனத்தில் கொண்டு ஓட்டுநர்கள் பணி நேரத்துக்கு தகுந்த ஓய்வு அளித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இதய உடல் நல பரிசோதனைகள் மேற்கொண்டு முறையான மருத்துவ ஆலோசனைகளை பெற்று நலம் பெற வேண்டும் என டாக்டர் மாதவன் அறிவுறுத்தி உள்ளார்.