மதுரை ஜூன் 18,
மதுரை மீனாட்சியம்மன் ஊஞ்சலில் சிவப்பு பட்டுத்தி எழுந்தருளினார் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மீனாட்சி அம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவத்தின் 4-ம் நாளன்று சிவப்பு நிற பட்டுத்தி மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் 100- கால் மண்டப ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். இந்த நிகழ்வில் அருள்மிகு சுந்தரேஸ்வரர் பிரியாவிடை மற்றும் அருள்மிகு மீனாட்சியம்மன் பின்னர் ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திருப்பொண்ணூஞ்சல் பதியகம் ஓதுவார் ஓதப்பட்டு தீபாராதனை
முடிந்து பிரகாரம் சுற்றி வந்து நேர்த்தி சென்றடைந்தார். இந்த நிகழ்வைக் காண மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை தந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.