மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களின் ஆய்வில்
தமிழ்நாட்டில் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய் நடைபயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் வேண்டுகோள்,
மதுரை, செப் 29
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களின் ஆய்வில்
தமிழ்நாட்டில் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய் வருவதாக
உலக இதய தினத்தையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவ நிபுணர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டு பேசுகையில்
நமது அன்றாட
வாழ்க்கைமுறை மாற்றங்கள், நீரிழிவு நேர்வுகளின் அதிகரித்த விகிதங்கள் மற்றும் முன்னதாகவே வருகிற உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக இதய நாள நோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்த வகையில்
தமிழ்நாட்டில்
35-முதல் 50 வயதுப் பிரிவை சேர்ந்த நபர்கள் மத்தியில் அதுவும் குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற பெரு நகரங்களில் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது. இம்மாநிலத்தில் குறிப்பாக 40-50 வயது பிரிவு நபர்களிடையே முதுமை காலத்திற்கு முன்பே வரும் இதய நோய் மற்றும் திடீரென ஏற்படும் மாரடைப்பினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்திருக்கின்றன,
என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வின் போது
இதயவியல் துறையின் முதுநிலை தலைவர்கள் மற்றும் இண்டர் வென்ஷனல் நிபுணர்கள் டாக்டர்கள்.N. கணேசன்,
R.சிவகுமார்,
S.செல்வமணி, M.சம்பத்குமார், ஜெயபாண்டியன், இதயவியல் துறையின் இணை மருத்துவ நிபுணர் டாக்டர் தாமஸ் சேவியர் பால் சிங், இதய மயக்க மருந்தியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். S. குமார், இதய அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். R.M கிருஷ்ணன், இதய அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ராஜன் ஆகியோர்கள்,
உடனிருந்தனர்.