மதுரை டிசம்பர் 22,
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புதிய தேர்வாணையர் நியமனம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தேர்வாணையராக பணியாற்றி வந்த தர்மராஜ் மீது தேர்வுத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இதனால் தேர்வாணையர் பதவியை ராஜினாமா செய்வதாக தர்மராஜ் பதிவாளர், கன்வீனர் குழுவிற்கு கடிதம் அனுப்பினார். இந்த புகார் தொடர்பாக தேர்வாணையர், மற்றும் புகார் அளித்த பெண் ஆகியோரிடம் கன்வீனர் குழு விசாரணை நடத்தியதில் தர்மராஜின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. அவருக்கு பதில் சீனியர் துணைப் பதிவாளர் முத்தையா புதிய தேர்வாணையராக பொறுப்பேற்றார்