மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக்கில் மாணவியர் சேர்க்கை பாலிடெக்னிக் முதல்வர் தகவல்
மதுரை TPK ரோடு அரசு மகளிர் பாலிடெக்னிக்கில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணையதள வாயிலாக நடைபெற்று வருகிறது என இக்கல்லூரி முதல்வர் மு.அமுதா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது
அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை (+2 தேர்ச்சி அல்லது ITI தேர்ச்சி) விண்ணப்பத்தினை (https://www.tnpoly.in) என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். எங்கள் கல்லூரி குறியீட்டு எண் 177. விண்ணப்பப் பதிவு கட்டணம் ரூபாய் 150. SC/ST மாணவியருக்கு இலவசம் மற்ற மாணவியருக்கு பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு கிரெடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை மூலம் செலுத்தலாம் எங்கள் கல்லூரியில் பயிற்றுவிக்கும் பாடப் பிரிவுகள் CIVIL, ECE, ICE, COMPUER ENGG, GARMENT TECH, & COMMERCIAL PRACTICE. விண்ணப்பிக்க இயலாத மாணவிகள் நேரடியாக எங்கள் கல்லூரிக்கு வந்து விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல் பெற (0452) 2679940, 9710938012 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் நேரடி இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் மே 25 தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.