மதுரை டிசம்பர் 12,
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.94 குறிஞ்சி நகரில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சோதனை ஓட்டமாக நீர் ஏற்றப்படுவதை மேயர் இந்திராணி பொன்வசந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் மண்டலத் தலைவர் சுவிதா, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கிய லெட்சுமி, உதவி ஆணையாளர் இராதா, மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா ஆகியோர் உடன் உள்ளனர்.