மதுரை மார்ச் 8,
மதுரை மாநகராட்சி CITIIS 2.0 ரூ.314.69 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய அரசாங்கம் 2.0 (CITIIS 2.0) திட்டத்தை 31 மே 2023 அன்று அங்கீகரித்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதி அமைச்சகம் (MOHUA) French Development Agency (AFD), Kreditanstalt für Wiederaufbau (KfW), European Union (EU), National Institute of Urban Affairs (NIUA) ஆகிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. CITIIS 2.0 திட்டத்திற்காக மதுரை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளின் கீழ் Waste to Energy (WtE) பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான நாற்கர ஒப்பந்தம் (மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி லிமிடெட், மாநில அரசு மற்றும் மத்திய அரசு) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 12 வது பிராந்திய 3 ஆர் மற்றும் சுற்றறிக்கை பொருளாதார மன்றத்தில் CITIIS 2.0 திட்டத்தின் கீழ் ரூ.314.69 கோடி மதிப்பீட்டில் 03.03.2025 மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.