மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு மதுரை சிட்டி அரிமா சங்கம் சார்பில் அரிசி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்ந விழாவிற்கு இப்பள்ளியின் தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை வகித்தார். அரிமா சங்க உறுப்பினர்கள் பழனிச்சாமி, மாரியப்பன், பால சுப்பிரமணியன், சண்முக சுந்தரம், அபுதாகிர் மற்றும் செல்வராஜ். ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தினசரி நாளிதழ்களின் வாசிப்புத்திறன் மேம்படுத்துதல் குறித்து சிறப்புரையாற்றினர். அப்போது பள்ளி
உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகீர் உசேன், ரஹ்மத்துல்லா மற்றும் ஆசிரியர்கள் செய்யது இப்ராஹிம், அல்ஹாஜ் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை
உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் நிர்வாக அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.