சென்னை, நவ.21,
பிரீமியம் மற்றும் ஆடம்பர குளியல் மற்றும் சமையலறை பொருத்து சாதனங்களில் முன்னணி நிறுவனமான ஹான்ஸ்கிரோஹே சென்னையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட, பிரத்யேக ஷோரூமான “பெர்சனல் ஸ்பேஸ் – ஐ திறந்துள்ளது.
சென்னையின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் வளர்ச்சிக்காக இந்த பிரம்மாண்டமான ஷோரும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஷோரூம்களில் ஒன்றான இது 1200 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பிராண்டின் தரமான பொருட்களை உபயோகத்திற்கான அதிநவீன வசதியை வழங்குகிறது.
இந்த புதிய ஷோரூம் கட்டிடக் கலைஞர்கள், உட்புற வடிவமைப்பாளர்கள் மற்றும் அழகான தனிமையான குளியலறையை விரும்பும் மற்றும் புதுமையான வடிவமைப்பு, தரம் ஆகியவற்றைப் பாராட்டும் அழகியல் உணர்வுள்ள நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹான்ஸ்கிரோஹே
குழுமத்தின் ஆசியாவின் விற்பனைபிரிவு துணைத் தலைவர் தாமஸ் ஸ்டாப்பர் மேலும் கூறுகையில், ஆடம்பர குளியலறை சாதனங்கள் தயாரித்து வழங்குவதில் ஹான்ஸ்கிரோஹே முக்கிய சந்தைகளில் ஒன்றாகும், மேலும் சென்னையில் உள்ள இந்த புதிய தனித்துவமான ஷோரூம் எங்கள் நிலையை
விரிவுபடுத்துவதற்கான முயற்சியாக விளங்கும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஷோரும் வாடிக்கையாளர்கள் மற்றும் கட்டிட வடிமைப்பாளர்கள் ஒரே மாதிரியாக உள்ள குளியலறை இடங்களை மறு வடிவமைத்து, அவற்றை ஸ்பா போல உணர ஊக்குவிக்கும் தரமான தயாரிப்புகளை எடுத்துக்காட்டுகிறது என்றார்.
ஹான்ஸ்கிரோஹே இந்தியா & சார்க் நாடுகளின் சந்தைப்படுத்தல் தலைவர் அபிஜீத் சோனார் பேசுகையில், “சென்னையில்
இந்த ஷோரூம் அறிமுகத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் “ஹான்ஸ்கிரோஹே” மற்றும் “அக்சர் ” தயாரிப்புகளின் தரம் மற்றும் கைவினைத் திறனை ஒரே இடத்தில் நேரில் அனுபவிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள் என்றார்.