திண்டுக்கல் பேகம்பூர் மதுரை ரோட்டில் உள்ள லூர்து மாதா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கல்வி கண் திறந்த காமராஜரின் 122- வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் காமராஜர் பற்றி கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக செஞ்சிலுவை சங்க மாவட்ட சேர்மன் நாட்டாண்மை
Dr.N.M.B. காஜாமைதீன் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் அருட் சகோதரி அருள்மேரி தலைமை தாங்கினார். முதல்வர் அருள் சகோதரி ரெக்ஸிலின்மேரி முன்னிலை வகித்தார். இதில் பள்ளியின் ஆசிரியைகள் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.