கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய கணக்கம்பட்டி கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோவிலில் ஸ்ரீ கோகுல கிருஷ்ணர் 5251 ஆம் ஆண்டு ஜெயந்தியை முன்னிட்டு யாதவ குல சமுதாயம் கொண்டாடும் 22 ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
காலை கொடி ஏற்றுதல் மற்றும் கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது கோகுல கிருஷ்ணன் ஐம்பொன் திருவுருவ சிலைக்கு பிரதிஷ்டை நடைபெற்றது கோகுலகிருஷ்ணர் திருத்தேர் சுதர்சனயாகம் நடைபெற்றது கருட வாகனத்தில் தேரோட்டமும் உறி அடித்தல் நிகழ்ச்சியும் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்த அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது
சுவாமி தேர் ஊர்வலமாக தாரை தப்பட்டை குழுவுடன் வந்தது மதியம்
1 மணியிலிருந்து இரவு வரை அன்னதானமும் ஸ்ரீ கிருஷ்ணர் அஷ்டமி பூஜையும் மற்றும் இரவு 10 மணியளவில் மாபெரும் வானவெடிக்கை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பெரிய கணக்கம்பட்டி சின்ன கணக்கம்பட்டி நொச்சிபட்டி உள்ளிட்ட யாதவ சமுதாய மக்களும் ஊர் பொதுமக்களும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.