மதுரை மார்ச் 15,
மதுரையில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பங்குனி பெருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் ஏழாம் நாளன்று ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் அன்னை தெய்வானை எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற பிறகு வீதியுலா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.