மதுரை அக்டோபர் 14,
மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த 3ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் கோவர்த்தனாம்பிகைக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம், சிவபூஜை, அர்த்தநாரீஸ்வரர், மகிஷாசுர வர்த்தினி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் நிறைவு நாளான சுப்பிரமணிய சுவாமி பசுமலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் கோயிலிலிருந்து பசுமலை மண்டபத்திற்கு புறப்பாடானார். நவராத்திரி பண்டிகை நிறைவு நாள் பத்தாம் நாள் நிகழ்ச்சியாக விஜயதசமி
அன்று பசுமலையில் சுப்ரமணிய சுவாமி தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டுத்திக்கும் பலி கொடுக்கப்பட்டு நான்கு திசைகள் மற்றும் மேல் நோக்கி அம்பு போடப்பட்டது. நிகழ்ச்சி நடைபெற்று கோவிலுக்கு வந்து தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு சுப்பிரமணியசாமி தெய்வானை அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை துணை ஆணையர்/செயல் அலுவலர் சுரேஷ்
மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா,
அறங்காவலர்கள் சண்முகசுந்தரம் பொம்மதேவன் மணி செல்வம் ராமையா மற்றும் கண்காணிப்பாளர் மற்றும் பசுமலை மண்டப பொறுப்பாளர் அழகு கோயில் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.