மதுரை பிப்ரவரி 7,
மதுரையில் பச்சை குதிரை வாகனத்தில் முருகப்பெருமான்
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இரவு முருகப்பெருமான் பச்சை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து நகரில் திருவீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.