மதுரை செப்டம்பர் 13,
புட்டுத் திருவிழாவிற்கு மதுரை வந்தார் முருகப்பெருமான் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி புட்டு திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அரிமர்த்தன பாண்டியனாக நேற்று (செப்.,12) காலை திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை புரிந்தார்.
(செப்.,11) மாலை திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார்.இன்று (செப்.,13) நடைபெறும் புட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறுகிறது.