அரியலூர்,மே:18
அரியலூர் நகரில் சின்னகடை தெருவில் அமைந்துள்ளது பாலபிரசன்ன சக்தி விநாயகர் ஆலயம். ராகு, கேதுவுடன் விநாயகர் அமைந்துள்ள பிரசித்திபெற்ற இந்த தலத்தில் மழைவேண்டி தண்ணீர் தொட்டி அமைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யபட்டது. இதில் அரியலூர் மாவட்டம் வறட்சி பகுதி என்பதாலும், மேலும் அக்னி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மழை பெய்ய வேண்டி சுவாமியை சுற்றி கண்ணாடி தொட்டி அமைக்கபட்டது. மேலும் அதில் தண்ணீர், வெட்டிவேர், பன்னீர், திரவியபொடி கலந்து செயற்கை நீருற்று அமைக்கபட்டு விநாயக பெருமானை தினந்தோறும் குளிர்வித்து வந்தனர். இந்நிலையில் விநாயக பெருமான் குளிர்ச்சியடைந்து, அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக அரியலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததையொட்டி விநாயகரை சுற்றி இருந்த கண்ணாடி தொட்டி அகற்றபட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதணை காண்பிக்கபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.