கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கண்ணண்டஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட கெட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா (52). இவரது கணவர் ராமச்சந்திரன் பெங்களூரில் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இதனால் சித்ரா கெட்டம்பட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 12.07.2024 அன்று தனது கணவரை பார்க்க வீட்டை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சித்ரா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த இரும்பு பெட்டி மற்றும் 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து சென்றனர். இரும்பு பெட்டியில் 40 சவரன் தங்க நகைகள் இருந்ததை பெட்டியோடு எடுத்து சென்றது குறித்து மத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் புகாரை ஏற்காமல் வழக்கு பதியாமல் இழுதடிப்பதாக வேதனை தெரிவித்தார் சித்ரா.
அதேபோல் சித்ரா வீட்டில் கொள்ளையடித்துவிட்டு சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கெவரப்பன் (65) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 சரவன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கெவரப்பன் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சித்ராவின் நகைகள் மற்றும் பணம் அதிகம் என்பதால் வழக்கு பதியாமல் இருப்பதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிய வருகிறது. அத்திகானூர் மற்றும் கண்ணன்டஹள்ளி ஆகிய பகுதிகளில் அடிக்கடி திருட்டு நடந்த வண்ணம் இருப்பினும் ரோந்து பணியை மேற்கொள்ளாமல் இருந்து வருவது வேதனையளிப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.