இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் தூத்துக்குடியில் மகளிர் சுயஉதவிக் குழு பயனாளர்களுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது.பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில், குறிப்பாக தூத்துக்குடி சுற்று வட்டார மாவட்டங்களை மையமாகக் கொண்டு, புதிய சுய உதவிக் குழுக்களை (SHG) உருவாக்கி கடன் வழங்குவது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் போது வங்கியின் செயற்குழு இயக்குநர் எம். கார்த்திகேயன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 400 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், சர்வோதயா அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி பி. ராஜனும் இதில் பங்கேற்றார்.வங்கியின் களப்பொதுமேலாளர் (சென்னை) முகேஷ் சர்மா மற்றும் மதுரை மண்டல மேலாளர் கே. கிஷோர் குமார் அவர்களும் பேங்க் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி, காமநாயக்கன்பட்டி, கோவில்பட்டி மற்றும் இராமநாதபுரம் வங்கி பணியாளர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் சர்வோதயா குளுமமின் முதன்மை செயல் அலுவலர் பி.ராஜன் மற்றும் அதன் பணியாளர்களும் பங்கேற்றனர்.
சிறப்பு உரையில், செயற்குழு இயக்குநர் எம். கார்த்திகேயன், சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, கடனுதவி வழங்குவதன் மூலம் பெண்களை வலுப்படுத்த வங்கியின் பங்களிப்பை விவரித்தார். சிறப்பு உரையில், செயற்குழு இயக்குநர் எம். கார்த்திகேயன், சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்குவதன் மூலம் பெண்கள் முன்னேற்றத்தில் வங்கியின் பங்களிப்பு குறித்து விவரித்தார்.சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களில் தவறுதல் விகிதம் மிகவும் குறைவாக உள்ளதையும், தனிப்பட்ட பெண்கள் பயனாளர்களுக்கான ‘ஸ்டார் சகி’ என்ற திட்டங்களையும் பற்றி அவர் விளக்கினார். களப்பொதுமேலாளர் முகேஷ் சர்மா, PMSBY, PMJJBY, APY போன்ற மைய சேவைகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.
ஆரம்பத்தில், வங்கி ஜூன் மாதத்தில் ரூ. 20 கோடி வரை கடனுதவி ஒப்புதலை வழங்கியிருந்தது. தற்போது மேலும் ரூ. 5 கோடி ஒப்புதலை இந்நிகழ்ச்சியின் மூலமாக வழங்கியுள்ளது. நிகழ்ச்சியில் பயனாளர்களுக்கு ஒப்புதல் கடிதங்கள் செயற்குழு இயக்குநர் எம். கார்த்திகேயன் மூலமாக வழங்கப்பட்டன.