வேலூர் ஏப். 29
வேலூர் மாவட்டம் , தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் வேலூர் மாவட்ட பேரவை கூட்டம் வேலூர் ஏலகிரி அரங்கத்தில் மாவட்ட செயலாளர் ராஜன் இணைச் செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது மாவட்ட மகளிர் அணி செயலாளர் இளவரசி வரவேற்புரையாற்றினார் ராமு எஸ்விஎல்எஸ் மாநிலத் தலைவர் வெங்கடாசலம் மாநிலத் துணைத் தலைவர் கண்ணன் மாநில செயலாளர் ஆனந்தி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநில பொதுச் செயலாளர் பொறுப்பு மற்றும் பொருளாளர் ஜி. கதிரவன் நிறைவுரையாற்றினார் வேலூர் மாவட்டம் கோட்டச் செயலாளர் கனகராஜ் வரவு செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தார். இந்நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். விஜயன் நிகிழ்ச்சியின் நிறைவாக நன்றி உரையாற்றினார்