மதுரை பிப்ரவரி 8,
தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்து முதன் முறையாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்து முதன் முறையாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதன்முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் உடல் உறுப்புதான கொள்கையை நிறைவேற்றும் வகையில் சுகாதார மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடனும் தமிழக அரசின் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு, ஐ.ஏ.எஸ்., தேசிய சுகாதார இயக்க நிர்வாக இயக்குநர் மரு.ஏ.அருண் தம்பு ராஜ், ஐ.ஏ.எஸ்., மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி, மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு.லெ.அருள் சுந்தரேஷ் குமார் ஆகியோரின் ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதலுடன் மதுரை இராசாசி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்செயலாக கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்ட 31 வயதான ஆயுதப்படை காவலர் மோகன்குமார் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் பிப்ரவரி 5 ந்தேதி அன்று மூளைச்சாவு அடைந்தார். மேற்படி நபர் உடல் உறுப்பு தானம் செய்யத் தகுதியானவர் என அடையாளம் காணப்பட்டு அவர் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒப்புதலுடன் உடல் உறுப்பு தானம் பெறப்பட்டது. அவரிடம் தானமாக பெறப்பட்ட கல்லீரல் 42 வயதான ஆண் நோயாளிக்கு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழுவால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நாளான 7 ந்தேதி நேற்று சிறப்பு சிகிச்சை பிரிவில் தானம் பெற்ற நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது. மேலும் அன்றைய தினமே காவலரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகம் .22 வயதான நோயாளிக்கு அரசு இராசாசி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழுவால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அரசு இராசாசி மருத்துவமனைக்கு ஆயுதப்படை காவலரிடமிருந்து கருவிழி, தோல் மற்றும் எலும்பு நன்கொடையாகப் பெறப்பட்டது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவ குழுவினர்கள்” குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைப் பிரிவு மரு.எஸ்.பத்மநாபன், மரு.எஸ்.கார்த்திகேயன், மரு.ஏ.சாஸ்தா, மரு.ஆர்.வில்லாளன்,
மரு.எஎப். பாலமுரளி மற்றும் குடல் மற்றும் இரைப்பை மருத்துவப் பிரிவு
மரு.எம்.கண்ணன், மரு.ரமணி மயக்கவியல் மருத்துவர்கள்
மரு.கல்யாண சுந்தரம், மரு.வைரவராஜன், மரு.சண்முக சுந்தரம், மரு.செந்தில் குமார், மரு.பாலமுருகன், மரு.ரமேஷ், மரு.பிரமோத், மரு.முரளி மற்றும்
செவிலியர்கள் ஜோதி, விஜயலட்சுமி
CMCHIS ஊழியர் சித்ரா மற்றும் இரத்த வங்கி மரு.சிந்தா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் மரு.அ.குமரவேல்
நிலைய மருத்துவ அலுவலர்கள் கேப்டன். மரு.சரவணன், மரு.ஜெ.முரளிதரன் மற்றும் உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள்
மரு.முருகுபொற்செல்வி, மரு.விஜி, மரு.சுமதி, மரு.கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.