ஈரோடு நவ 26
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கராவிடம்
ஈங்கூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சண்முகம் தலைமையில் ஈங்கூர் ஊராட்சி பகுதி மக்கள் மனு கொடுத்தனர்
அந்த மனுவில் கூறியிருப்பதாவது
ஈங்கூர் ஊராட்சியின் 7 வது வார்டில் உள்ள செங்குளத்தில் போயர்(கட்டிடம் வேலை செய்பவர்கள்) இடுகாடு மற்றும் பெருந்துறை சிப்காட்டின் பசுமை வெளி பூங்காவிற்கு கிழபுறம் உள்ள நத்தம் புறம்போக்கு நிலம் அறிந்து, ஊராட்சி மன்ற நிர்வாகம் 18 ஊரிலுள்ள திடக்கழிவுகளையும் மற்றும் பாலித்தீன் பேப்பர், மீன் கோழி மற்றும் மாமிச கழிவுகள் ஆடு, மாடு, பன்றிகள் கழிவுகள், ஓட்டலில் மீந்த பொருட்கள், காய்கறி கழிவுகளும் கொட்ட ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த இடம் ஈங்கூர் – கம்புளியம்பட்டி மெயின் ரோட்டிலிருந்து ஆலங்காடு, கந்தையன் காடு, செங்குளம் ஊரின் நடுவேலிருந்து தெற்கே சென்று ஈரோடு_ கோவை ரயில்வே பாதை கடந்து வேலாயுதம்பாளையம் வரை செல்லக்கூடிய வண்டிப்பாதை மற்றும் நீர் நில வழி பாதை ஆகும்.
இப்பாதையில் தான் செங்குளத்தின் நீர் ஆதாரம் ஆன இரண்டு ஆழ்குழாய் கிணறும் உள்ளது. இதிலிருந்து தான் தினசரி 30,000 லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 5 ஆண்டுக்கு முன்பிருந்து 4800 டிடிஎஸ் அளவு குறைந்து கடந்த சில மாதங்களாக 1000 டிடிஎஸ் குறைந்துள்ளது. சிப்காட் நிர்வாகம் ஊரின் தெற்கு பகுதி மற்றும் வடமேற்கு பகுதியில் பசுமை வெளி பூங்கா அமைத்து மரங்கள் வளர்த்து கொண்டுள்ளது. விரைவில் நல்ல காற்றும் கிடைக்கவுள்ளது.
இதுவரையில் புற்றுநோயால் 14 பேர்களை இழந்துள்ளோம். 5 ப
பேர்கள் தடுமாற்றத்தில் உள்ளனர். வெளியே கூறினால் வாரிசுகளுக்கு திருமணம் தடை ஏற்படும் என வெளியில் சொல்வதில்லை.
இதையும் மீறி குப்பைகளை கொட்டி, பாலித்தீன் பேப்பர்களையும் எரித்தால் இன்னும் புற்றுநோய் அதிகரிக்கும்.
நாற்றங்கள் அதிகமாவதால் ஈக்கள் பெருகி தொல்லை கொடுக்கும்.
கோழி கழிவுகளுக்கு நாய்கள் சண்டை இடுவதுடன் அருகில் உள்ள ஆடுகளை கடித்துக் கொள்ளும்.
சிப்காட் தண்ணீராலும் ரப்பர் எரித்ததால் ஏற்பட்ட பாதிப்பு போதும். இந்நிலையில் எங்களையும் நோயின்றி மனிதனாக வாழ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மூலம் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.