நாகர்கோயில்- செப்- 19,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மது கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும்,
முதல்வரின் வெளிநாட்டு பயணம் ஆக்கபூர்வமான பயணமா என்பது கேள்விக்குறி தான். நம்மைவிட சிறிய மாநிலங்களானான கர்நாடகா, தெலுங்கானா, முதல்வர்கள் வெளிநாட்டு பயணத்தின் முலம் அதிக முதலீடுகளை பெற்று வந்துள்ளனர். மீனவர்கள் அச்சமின்றி கடலுக்கு சென்று மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
த.மா.கா. உறுப்பினரின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது மாநில அரசு தான். மத்திய அரசு என்று ஏமாற்றக்கூடாது என்று கூறினார்