ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆக:22
ஸ்ரீவில்லிபுத்தூர்
கிருஷ்ணன்கோவில், லிங்கா குளோபல் பள்ளி, 10வது ஆண்டு விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரிசுகளை பள்ளி தாளாளர் கே ஸ்ரீதரன் வழங்கினார் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பத்தாவது ஆண்டு விழாவிற்கான விளையாட்டுப் போட்டிகள் தாளாளர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்
இயக்குநர்கள் டாக்டர். அறிவழகி ஸ்ரீதரன், முனைவர் எஸ்.சசி ஆனந்த், முனைவர் எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பல்கலை மாணவர் நல இயக்குநர் சாம்சன்
நேசராஜ் கலந்து கொண்டார்.
பள்ளி முதல்வர் முனைவர் அல்கா சர்மா வரவேற்றார்.
உடற்கல்வி இயக்குநர் கருப்பசாமி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரிய பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்