களியக்காவிளை, டிச- 9
களியக்காவிளை அருகே படந்தாலு மூடு பகுதியை சார்ந்தவர் கங்காதரன் மகன் உதயகுமார். இவர் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகியாக பதவி வகித்து வந்தார். 2017ம் ஆண்டு காலகட்டத்தில் படந்தாலு முடு பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தார். இவருக்கு படந்தாலுமூடு பகுதியில் லாட்ஜ் ஒன்று உள்ளது. இந்த விடுதியில் மதுபான கடை நடத்தி வந்தார். இதில் மது குடிக்க வந்த படந்தாலு மூடு பகுதியை சார்ந்த அப்பு ஆசாரி மகன் விஷ்ணுவை கள்ளக் காதல் விவகாரத்தில் உதயகுமார் மற்றும் பிஜு என்பவர் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விஷ்ணு சிகிட்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை வழக்கு குழித்துறை நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் பிஜு ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், நேற்று முன்தினம் உதயகுமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ5 – ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு சம்மந்தமாக ஆயூள் தண்டனை கைதி உதயகுமார் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.